Thursday, April 23, 2009

பக்தி

பக்தியினாலே- இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், - இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், - நல்ல வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி விளங்கிடும்.

- மகாகவி பாரதி